நிஷா இறக்கி விடு என்னைய.. கணவரை தலைக்கு மேல் தூக்கிய அறந்தாங்கி நிஷா

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

நிஷா இறக்கி விடு என்னைய.. கணவரை தலைக்கு மேல் தூக்கிய அறந்தாங்கி நிஷா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

நிஷா இறக்கி விடு என்னைய.. கணவரை தலைக்கு மேல் தூக்கிய அறந்தாங்கி நிஷா 2

விளம்பரம்

பல முயற்சிகளுக்கு பிறகு இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார் நிஷா.இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்,அதுவும் சாதாரண புகைப்படம் இல்லை கணவனை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடி என்னை வாழ்க்கையில் உயர்த்தியது எனது கணவர் என குறிப்பிட்டு நெகிழ்ந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்களும் இவர்களுக்கு தங்களது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நிஷா இறக்கி விடு என்னைய.. கணவரை தலைக்கு மேல் தூக்கிய அறந்தாங்கி நிஷா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment