The Indian Times

LOVE TODAY கதாநாயகி உடன் மேடையில் செம்ம ஆட்டம் போட்ட GP.முத்து… அரண்டு போன சாண்டி மாஸ்டர்

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

Advertisement

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார்.மேலும் நேற்று லவ் டுடே படத்தின் நூறாவது நாள் வெற்றிகொண்டாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜிபி முத்து படத்தின் கதாநாயகி இவனா உடன் சேர்ந்து நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஜிபி முத்து ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Embed video credits : NON STOP NEWS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in