The Indian Times

26 வயது நடிகையிடம் LOVE PROPOSE செய்த 80 வயது பாரதிராஜா

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.பல அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தியவர் இவர்.நடிகர் கமல்ஹாசனை வைத்து 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே.இப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவுக்குள் கால்தடம் பதித்தார் பாரதிராஜா.இப்படம் பெரும் வரவேற்பினை சினிமா ரசிகர்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே யாரும் எட்ட முடியாத உயரத்தினை அடைந்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாரதிராஜா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் என பல தரமான படங்களை அளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் ரசிகர்களால் பாரதிராஜா செல்லமாக இயக்குனர் இமயம் என அழைக்கப்பட்டார்.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.முதுமை காரணமாக தற்போது படங்கள் இயக்க ஆர்வம் காட்டாத பாரதிராஜா படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தில் இவர் நடிப்பு பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.

Advertisement

தற்போது இவர் வாத்தி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.இந்த விழாவில் பேசிய பாரதிராஜா வாத்தி படத்தின் கதாநாயகி சம்யுக்தாவை பார்த்தால் காதலிக்க வேண்டும் என தோன்றுகிறது.சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காலம் தப்பி வந்துடனோ ,சம்யுக்தாவை லவ் பண்ணிருப்பேன்,இப்போ கூட லவ் பண்ண தான் செய்றேன் என கூறி ஐ லவ் யு சம்யுக்தா என மேடையில் ப்ரொபோஸ் செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in