காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ராஷ்மிக்கா மந்தனா… அதுவும் யாருடன் தெரியுமா?

கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ,விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படத்தில் இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் உலக சினிமா முழுவதும் பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரிக்க தொடங்கியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ராஷ்மிக்கா மந்தனா... அதுவும் யாருடன் தெரியுமா? 1

விளம்பரம்

தெலுங்கில் மட்டுமே படம் நடித்து வந்த ராஷ்மிக்கா தமிழில் அறிமுகம் ஆக சரியான கதைக்கு காத்திருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது,இவர் இயக்கிய ரெமோ படத்தினை பார்த்த ராஷமிக்கா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை ,இதனால் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே சென்றார்.

காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ராஷ்மிக்கா மந்தனா... அதுவும் யாருடன் தெரியுமா? 2

விளம்பரம்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழில் தளபதி விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இன்று உலகமே காதலர் தினத்தினை கொண்டாடி வருகிறது,அதன்படி நடிகை ராஷ்மிக்கா பிரபல நடிகர் விஜய் தேவர்கொண்டவை காதலிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது,இதுகுறித்து அறிவிப்புகள் ஏதும் வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தனது வீட்டில் தனது செல்லமாக வளர்க்கும் நாயுடன் விளையாடி காதலர் தின வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.இது இவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment