The Indian Times

என் உலகமே நீ தாண்டா அமீர்… காதலர் தினத்தில் ROMANCE-ல் பட்டையை கிளப்பிய பாவனி அமீர்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக நடனமாடி டைட்டிலையும் வெற்றிபெற்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.தற்போது ஜோடியாக படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்,துணிவு படத்தில் அஜித்துடன் இருவரும் இணைந்து நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளனர். அமீரும் பாவனியும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களிடம் மிக பெரியளவு வைரலாகி வருகிறது.அன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் இவர்கள் புகைப்படம் தான் என்று கூறினால் மிகையாகாது

Advertisement

தற்போது இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் பயங்கர ரொமென்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.வீடியோவில் பாவனி காதலர் தின நல்வாழ்த்துக்கள் எனது உலகமே என அமீரை குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது காதலர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்,மேலும் வீடியோவை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கியும் வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in