The Indian Times

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் ஷிவானியின் முதல் காதலர்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எல்லா சீசனிலும் ஏதாவது ஒன்று இரண்டு காதல் மலர்ந்துவிடும் அதன்படி நான்கு வாரங்களில் கடந்து ஓடிக்கொண்டுருக்கும் பிக் பாஸ் தமிழ் நான்காவது சீசனில். ஒரு காதல் மலர்ந்துள்ளது அந்த காதல் நம்ம ஷிவானிக்கும் பாலாஜிக்கு தான். இந்த இருவருக்கும் ரொமான்ஸ் ஆரம்பத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவானியின் ஜோடியான அசீம் நுழைய போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அசீம் ‘பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜோடி சீசன் 10’ ஆகிய நிகழ்ச்சிகளில் ஷிவானிக்கு ஜோடியாக இருந்தவர்.இந்த சீரியலில் இருவரும் காதலர்களாக நடித்துள்ளனர். மேலும் இவர்களது ஜோடிப்பொருத்தம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்த இருவருக்குள் இடையில் சில பிரச்சினை காரணமாக இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த கடைக்குட்டி சிங்கம் தொடரில் இருந்து சிவானி திடீரென விலகி சென்று விட்டார். தற்போது ஆசிமை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in