The Indian Times

அம்மாவை பற்றி தப்பா பேசிய மாமியாரை அடிக்க பாய்ந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது கோபிக்கும் ராதிகாவுக்கும் உருவான குழந்தை கருவில் அழிந்ததால், அதற்கு காரணம் ஈஸ்வரி என அவரை வீட்டை விட்டு கோபி வெளியே அனுப்பியுள்ளார். இதனால் ஈஸ்வரி மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது நாடகம் விறுவிறுப்பாக சென்று வருகிறது. இந்நிலையில் கோபி மீண்டும் குடிக்க தொடங்கி உள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ராதிகா அம்மா கமலா, ஈஸ்வரியை பற்றி தவறாக பேசவே கடுப்பாகிய கோபி, அவரை அடிக்க சென்றுள்ளார். இதனால் கமலா ,ஈஸ்வரி மீது போலீசில் புகார் கொடுக்கவே போலீசார் அவரை கைது செய்ய வந்துள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in