The Indian Times

தங்கத்திற்கு பதில் கவரிங் நகையை மாற்றிக்கொடுத்த விஜயா.. கடையில் அசிங்கப்பட்ட முத்து மீனா… சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.தற்போது அனைவரும் மீண்டும் சேர்ந்து உள்ளனர்.

இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், விஜயா தங்கத்திற்கு பதில் கவரிங் நகைகளை கொடுத்து முத்து மற்றும் மீனாவை கடைக்கு அனுப்புகிறார். அங்கு கவரிங் என தெரியவரவே கடுப்பாகி முத்து வீட்டுக்கு செல்கிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in