The Indian Times

வெறித்தனமாக வெளியாகிய விடாமுயற்சி FIRST LOOK போஸ்டர் இதோ

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித் குமார். இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் படங்கள் வெளியாகும் நாள் தான் இவரின் ரசிகர்களுக்கு திருவிழாவே என்று சொல்லலாம். தற்போது தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு, ஒருவருடத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இதனால் கடுப்பாகிய அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விடாமுயற்சி படத்தில் அப்டேட்டுகளை கேட்டு வந்தனர். மேலும் படம் கைவிடப்பட்டதாகவும் பல வதந்திகள் படம் குறித்து வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தினை முடிக்கும் முன்னரே அஜித் ஆத்விக் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இது ரசிகர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபக்கம் விடாமுயற்சி படத்தால் சோகத்திலும் இருந்தனர். தற்போது இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் படத்தின் போஸ்டரை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in