The Indian Times

உனக்கு தெரியாததை சமைக்க சொல்லி உன்ன போட்டு கொடுத்ததே நான் தாண்டி… பாக்கியாவுக்கு எதிராக சூழ்ச்சி வலையை வீசிய கோபி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ராதிகாவை வீட்டில் இருந்து திருமணத்திற்காக தனியாக அழைத்து வருகிறார் கோபி,அதே கல்யாணத்தில் கேட்டரிங் ஆர்டர் எடுத்திருக்கிறார் பாக்கியா,அதே கல்யாணத்திற்கு பாக்கியாவும் வருகை தந்துள்ளார்.அதே கல்யாணத்தில் வேலைக்காரி செல்வியை பார்த்து பயந்து நடுங்கியுள்ளார் ,மேலும் பாக்கியா வந்திருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் கோபி.மேலும் பாக்கியா போகும் இடமெல்லாம் பழனிச்சாமி வருவதால் கோபி கடுப்பாகியுள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இந்த ப்ரோமோவில் திருமணத்தில் மலேசியன் உணவு இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி அதனை கேட்டரிங் காண்டிராக்ட் அவர்களிடம் கொடுக்க சொல்லி சொல்லுகிறார் கோபி,பாக்கியாவுக்கு மலேசியன் உணவு சமைக்க தெரியாது என்பதால் அவரை உள்ளே இழுத்துவிடுகிறார்,மேலும் உன்னை போட்டுக்கொடுத்ததே நான் தாண்டி என பாக்யவிடம் தைரியமாக கூறியும் செல்கிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in