The Indian Times

மகனின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்த சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில் ஸ்ரீஜா தம்பதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.இந்த நாடகத்திற்கு பலத்த வரவேற்பு ரசிகர்களிடம் இருந்தது.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் ரசிகர்கள் நினைத்தது போலவே இந்த நாடகத்தின் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நாடகத்திற்கு பிறகு ஸ்ரீஜா குடும்பத்தினை கவனிக்க தொடங்கிவிட்டார்,அதேபோல செந்திலும் வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றியும் கிடைக்கும் நாடகங்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தார்.

இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா தற்போது கர்ப்பமாக உள்ளார்.இதனை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது. செய்தி அறிந்த ரசிகர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜாவுக்கு தங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனை மகிழ்ச்சியாக செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவில் பெற்றோர்களாக பிறந்திருக்கிறோம் என் மகனால் என நெகிழ்ந்து பதிவிட்டு இருந்தார்

தற்போது இவர் தனது குழந்தையின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in