The Indian Times

விஜய் டிவி ரக்ஷனின் இந்த புகைப்படங்களை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா?

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான சேனல் என்றால் அதில் விஜய் டிவி யும் ஒன்று. விஜய் டிவிக்கு வந்தாலே போதும் பெரிய இடத்தை பிடித்து விடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது உள்ள பல திரைப்பட நடிகர்கள் விஜய் டிவி மூலமாக சினிமாவிற்குள் கால் பதித்துள்ளனர். அப்படி விஜய் டிவியில் தற்போது பிரபலமாக உள்ள நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

அப்படி தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் ரக்ஷன். ரக்ஷன் முதன் முதலில் அறிமுகமானது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தான் என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் ரக்ஷன் ஏற்கனவே முன்பு விஜய் டிவியில் பிரபலமாக இருந்த அது இது எது நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்டு இருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு காலத்தில் தொகுத்து வழங்கும் நிக்ஸ்ச்சியாக இருப்பது அது இது எது நிகழ்ச்சி. அந்த நிகழியில் சிரிச்ச போச்சு என்ற பகுதியில் போட்டியாளர்களை சிரிக்க வைக்க சிரிச்ச போச்சு டீம் வருவார்கள். அதில் ரக்ஷனும் பங்கேற்று சிரிச்ச போச்சு பகுதியில் நடித்துள்ளார் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. தற்போது ரக்ஷன் throwback என்ற ஹாஷ்டாக்குடன் சிரிச்ச போச்சு நிகழ்ச்சியில் பாகேற்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in