தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் வீட்டில் இருப்பவர்கள் தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.அவர்களிடம் பிக் பாஸ் வீட்டில் குத்து விளக்கு யார் என கேட்க அதற்கு ராமசாமி மகேஸ்வரி என கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியே கரெக்ட் பண்ணிடுவாரு போலயே என கேலி செய்து வருகின்றனர்.
Embed video credits : Disney plus hot star