The Indian Times

எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டியே… இளையராஜா மகளை கண்டு அழுத பாரதிராஜா

இசைக்கே சொந்தக்காரர் இளையராஜா என்றே சொல்லலாம்,இன்று வரை அவரது பாடல்கள் ஒலிக்காத இடமில்லை,தனது பாடல்களால் மக்களை கட்டிபோட்டுள்ளவர் இளையராஜா.இவரின் இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா மகள் பவதாரிணி மறைவு சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.47 வயதில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி உயிரிழந்துள்ளார்.புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த பவதாரிணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.அவரின் உடல் சென்னையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

Advertisement

தற்போது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.அங்கு பொதுமக்களின் பார்வைக்கு பவதாரிணி உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்த வந்த பாரதிராஜா, பவதாரிணியின் உடலை பார்த்து துடித்து அழுது உள்ளார். இது அங்கு இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Embed Video Credits : SUN NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in