The Indian Times

தர லோக்கலாக குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அப்பொழுது வரை இவர் இவ்வளவு பெரிய நடிகையாக உருவெடுப்பாரா என்பது யாருக்கும் தெரியாது.இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

Advertisement

தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார்.தற்போது இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தற்போது இவர் தங்கையின் திருமண நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in