The Indian Times

“24 மணி நேரமும் பிக் பாஸ் பார்க்க தயாரா?” கமல் ஹாசன் அறிவித்த சூப்பர் அப்டேட் இதோ! Bigg Boss OTT Launch

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் 106 நாட்களும் சுவாரஸ்யத்தை வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மக்கள் ஒவ்வொரு நாளும் பார்த்து யார் நல்லவர் யார் கேட்டவர் என ஒவ்வொரு போட்டியாளரின் செயலை கண்டு நடுநிலையாக வாக்குகள் மூலம் தீர்ப்பு வழங்கி மக்கள் மனதை வென்றவருக்கு பணமும் பட்டமும் வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே! இப்பொழுது 106 நாட்களை கடந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. முடிவுக்கு வந்துவிட்டதே என மக்கள் வருத்தப்பட்டாலும் மக்களின் கவலையை தீர்க்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பை கமல் ஹாசன் பிக் பாஸ் இறுதி எபிசோடில் அறிவித்துள்ளார்.

Advertisement

அதில் கமல் ஹாசன் தயாரிக்கும் படத்தில் மக்கள் நாயகன் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அறிவிப்பை வழங்கினார். அதன்பிறகு மக்கள் 24 மணிநேரமும் OTT தளமான Disney Plus Hotstar-ல் ஒளிபரப்ப போவதாகவும் அதுமட்டுமில்லாமல் அதிலும் கமல் ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கப்போவதாக மக்கள் முன் அறிவித்துள்ளார்! அது மட்டுமில்லாமல் விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன் கையால் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியின் LOGO மற்றும் அந்த நிகழ்ச்சியின் பெயரை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியின் பெயர் “BIGG BOSS ULTIMATE” ஆகும். மேலும் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பதும் மற்றும் அது குறித்த விவரமான செய்திகளை கீழ்வரும் வீடியோவில் கண்டு மகிழுங்கள்! Watch The Video Below…

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in