The Indian Times

பிக் பாஸ் 6ல் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவர்தானாம்… குறைந்த வாக்குகள் இவருக்கு தான் உள்ளதாம்?

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது பிக் பாஸ்.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,கன்னடம் என பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.அந்தந்த நிகழ்ச்சிகளை அம்மொழியின் உச்ச நட்சத்திரம் ஒருவர் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அதன்படி தமிழுக்கு உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement

தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.முன்னதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து தாமாகவே வெளியேறினார்.

Advertisement

இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருக்கும் நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி இந்த வாரம் அசீம்,ஷெரினா,ஆயீஷா,கதிர் மற்றும் விக்ரமன் எலிமினேஷனில் உள்ளனர்.இதில் ஷெரினா மற்றும் ஆயீஷா குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .எனவே இந்த வாரம் இவர்களில் ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in