The Indian Times

மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.

தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை உள்ளே இருப்பார் என உறுதியாக நினைக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.

Advertisement

அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை சர்வதேச அழகிப்போட்டியில் வென்றார்.

150க்கும் அதிகமான மேடைகளில் ரேம்ப்வாக் செய்து அசத்தியுள்ளார்.முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியவர்.

மேலும் சில தமிழ் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் அக்ஷரா.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவுக்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய வருண் உடன் இவரது நட்பு தொடர்ந்து வருகிறது.அடிக்கடி அவருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா வெளியிட்டு வருவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் மீண்டும் மாடலிங்கில் கலக்கி வருகிறார், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in