The Indian Times

அதர்வாவிற்கு வில்லனாக ஆட்டம் காட்டும் ஜெய் பீம் மணிகண்டன் – மத்தகம் ட்ரைலர் இதோ

ஜெய் பீம் படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகர் மணிகண்டன்,இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது ஜெய் பீம் படத்தில் கிடைத்துள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் பீட்ஸா 2.இப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits – DISNEY PLUS HOT STAR

இப்படி சினிமாவில் படிப்படியாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு தான் ஜெய் பீம்.இப்படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ளார் மணிகண்டன்.

தற்போது இவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடித்த குட் நைட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இவர் நடிகர் அதர்வா உடன் இணைந்து மத்தகம் படத்தில் நடித்துள்ளார் இப்படம் நேரிடையாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in