தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.
இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது.
இவரது மகன் சண்முகபாண்டியன்,இவர் தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சகாப்தம் படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் கொடுக்கவில்லை,விஜயகாந்த் பெற்ற வரவேற்பினை அவரது மகன் பெறாதது வருத்தம் அளிக்கும் விஷயமாகத்தான் அமைந்துள்ளது.
தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.இயக்குனர் அன்பு இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தின் பட பூஜை அண்மையில் நடைபெற்றுள்ளது.
கேரள காடுகளில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி, மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.இப்படத்தின் தலைப்பு இந்த மாதம் வெளியாக உள்ளது.ரசிகர்கள் ஷண்முக பாண்டியனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in