உடல் எடை மெலிந்த இயக்குனர் பாரதிராஜா..நேரில் சென்று பார்த்த முதல்வர் ஸ்டாலின்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.பல அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தியவர் இவர்.நடிகர் கமல்ஹாசனை வைத்து 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே.இப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவுக்குள் கால்தடம் பதித்தார் பாரதிராஜா.இப்படம் பெரும் வரவேற்பினை சினிமா ரசிகர்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே யாரும் எட்ட முடியாத உயரத்தினை அடைந்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாரதிராஜா

கட்டாயம் படிக்கவும்  அதிதி சங்கர் உடன் மரண குத்து போட்ட சாண்டி மாஸ்டர்

உடல் எடை மெலிந்த இயக்குனர் பாரதிராஜா..நேரில் சென்று பார்த்த முதல்வர் ஸ்டாலின் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் என பல தரமான படங்களை அளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் ரசிகர்களால் பாரதிராஜா செல்லமாக இயக்குனர் இமயம் என அழைக்கப்பட்டார்.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.முதுமை காரணமாக தற்போது படங்கள் இயக்க ஆர்வம் காட்டாத பாரதிராஜா படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தில் இவர் நடிப்பு பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது.

கட்டாயம் படிக்கவும்  சேலையை ஓரம்கட்டு...MODERN உடையில் பட்டையை கிளப்பும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா

உடல் எடை மெலிந்த இயக்குனர் பாரதிராஜா..நேரில் சென்று பார்த்த முதல்வர் ஸ்டாலின் 2

விளம்பரம்

இந்நிலையில் பாரதி ராஜா உடல்நல குறைவால் கடந்த 23 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.தற்போது உடல் நலம் தெரிய பாரதிராஜா வீடு திரும்பியுள்ளார்.வீடு திரும்பிய அவர் ஓய்வெடுத்து வருகிறார்.தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாரதிராஜாவை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.இவருடன் கவிஞர் வைரமுத்துவும் பாரதிராஜாவை வீட்டில் சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment