The Indian Times

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின்,மைம் கோபி,விஜே விஷால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.

ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றார்.இரண்டாவது எலிமினேஷனில் காளையன் வெளியேறியுள்ளார்.இந்நிலையில் மூன்றாவது எலிமினேஷனுக்கான போட்டி நடைபெற்றுள்ளது.இந்த போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்களில் இருந்து ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நிகழ்ச்சி ஒளிபரப்பிற்கு பின்பு வெளியாகியது யார் என்று தெரியும் அதுவரை பொறுத்திருப்போம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in