The Indian Times

நீங்க பாக்கியாவா? நான் அவங்க பொண்ணுன்னு நினைச்சிட்டேனே.. பாக்கியாவை வெட்கப்பட வைத்த பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,ராதிகா நிறுவனத்திடம் கேட்டரிங் ஆர்டர் வாங்கி வேலை செய்து வரும் பாக்கியலட்சுமி.அங்கு வரும் ராதிகா இனி சேலை உடுத்திக்கொண்டு யாரும் வேலை செய்ய கூடாது அனைவரும் சுடிதாரில் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார்.ஆனால் இப்படி கூறினால் பாக்கியா வரமாட்டார் என திட்டம் போட்ட ராதிகாவுக்கு,பாக்கியா சுடிதாரில் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.சுடிதாரில் வந்த பாக்கியா அவர் ஆங்கிலம் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு பாக்கியாவை பார்த்த பழனிச்சாமி அவரின் அழகை கண்டு நீங்க பாக்கியாவா நான் அவங்க பொண்ணுன்னு நினைச்சிட்டேன் என கூறவே வெட்கத்தில் சிவந்துள்ளார் பாக்கியா.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் பாக்கியா ரொம்ப வெட்கப்படுறாங்களே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=eaXl84FVPX8

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in