அட குக் வித் கோமாளியின் பத்தாவது போட்டியாளர் இவரா? அப்போ கோமாளிகள் நிலைமை பரிதாபம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

அட குக் வித் கோமாளியின் பத்தாவது போட்டியாளர் இவரா? அப்போ கோமாளிகள் நிலைமை பரிதாபம் 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.வழக்கம் போல இந்த சீஸனும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

அட குக் வித் கோமாளியின் பத்தாவது போட்டியாளர் இவரா? அப்போ கோமாளிகள் நிலைமை பரிதாபம் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்களை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு பத்தாவது போட்டியாளர் அடுத்தவாரம் முதல் வருவார் என அறிவித்திருந்தனர்,இதனால் யார் அந்த போட்டியாளராக இருப்பார் என ஆவல் அதிகரித்துள்ளது.அதன்படி பத்தாவது போட்டியாளர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது,திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மைம் கோபி தான் அந்த பத்தாவது போட்டியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

அட குக் வித் கோமாளியின் பத்தாவது போட்டியாளர் இவரா? அப்போ கோமாளிகள் நிலைமை பரிதாபம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment