The Indian Times

மீண்டும் நகைச்சுவையில் இறங்கி கலக்கும் விமலின் தெய்வ மச்சான் TRAILER இதோ…

கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் விமல். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் கதாநாயகனாக பசங்க படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த களவாணி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் விமல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடித்த வாகை சூடவா படத்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழக விருதினை பெற்றார் விமல்.இந்நிலையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மேல வந்த விமலுக்கு படங்கள் சரியாக ஓடாமல் பெரும் சரிவினை கொடுக்க தொடங்கியது.இதில் இருந்து மீண்டும் வர விமல் போராடியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது,இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் படங்களை நடித்து வருகிறார்,அந்த வரிசையில் இவர் அண்மையில் நடித்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இயக்குனர் மார்ட்டின் குமார் இயக்கத்தில் தெய்வ மச்சான் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் பாண்டிய ராஜன்,ஆடுகளம் நரேன்,பாலா சரவணன்,அனிதா சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். காட்வின் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது,தற்போது இப்படத்தின் ட்ரைலரை படகுழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் விலங்கு போல இப்படமும் நல்ல வரவேற்பினை விமலுக்கு பெற்றுத்தர வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in