The Indian Times

நடிகை கீர்த்தி சுரேஷை திடீரென தாக்கிய அவரது செல்ல பிராணி… விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது நடந்த விபரீதம்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.தற்போது இவருக்கு தசரா படம் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கீர்த்தி சுரேஷ் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது அவரது நாயுடன் விளையாடி கொண்டிருக்கும் பொழுது திடீரென அவரது நாய் கீர்த்தியை கண்களில் தாக்கியுள்ளது.இதனால் கீர்த்தி வலியில் துடித்துள்ளார்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது ஐயயோ கீர்த்தி உங்களுக்கு ஒன்னும் ஆகலையே என ரசிகர்கள் பதறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in