The Indian Times

எம் தமிழ் வாழ்க… தூய தமிழ் வரிகளில் வெளியாகிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாவது பாடல்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இயக்குனர்கள் இயக்க முயன்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.சோழர்களின் வரலாறை பறைசாற்றும் கல்கி எழுதிய நாவல் தான் இந்த பொன்னியின் செல்வன்.நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இப்படத்தினை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய காவியத்தினை கொடுத்து பெருமை படுத்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.இப்படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.உலகம் முழுவதும் பல மக்களால் அதிகம் வரவேற்க்கப்பட்டது.தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் இப்படம் கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை மணிரத்தினத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இப்படம் உலகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில்.இரண்டாவது பாடல் ஆன வீர ராஜா வீர என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ஏஆர் இசையில் இளங்கோ கிருஷ்ணன் பாடல்வரிகளில் சங்கர் மஹாதேவன்,சித்ரா மற்றும் ஹரிணி குரலில் இப்பாடல் உருவாகியுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பாடல் அருமையாக இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.வீடியோ யூடியூபில் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in