The Indian Times

படம் பாக்குற நம்மளையெல்லாம் ஏமாத்தி காசு வாங்கிட்டு இருக்காங்க… செம்ம கடுப்பாகிய BLUESATTAI மாறன்

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16 1947.சுதந்திர காலகட்டத்தில் கிராம மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது அதே சமயம் அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததே தெரியவில்லை என்றால் அதனால் ஏற்படும் நிகழ்வுகளை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் புகழ் நடித்துள்ளார்.மேலும் பல நடிகர்களும் அந்த காலகட்டத்திற்கே சென்று அங்கேயே வாழ்வதாக நினைத்து படங்களில் வாழ்ந்து இருக்கின்றனர் என்பது படத்தினை பார்க்கும் பொழுது தெரிகிறது.

Advertisement

இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.விமர்சனத்தில் அவர் கூறியதாவது,இந்த கதையோட நம்மளால ஒன்றவே முடியலை,படத்துல புதுசுனு சொல்லிக்கிற அளவுக்கு ஒண்ணுமே இல்லை.இது ஒரு பண்ணையார் கதை.இந்த பண்ணையார் கதையை வெளிநாட்டுக்காரன் வச்சி எடுத்து வச்சிருக்காங்க.,படம் பாக்குற நம்மளையெல்லாம் ஏமாத்தி காசு வாங்கிட்டு இருக்காங்க.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in