The Indian Times

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய ராஷி கன்னா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளையே பின் தள்ளும் விதமாக பல புது முக நடிகைகள் வளர்ந்து வந்து விட்டனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகை ராஷி கன்னா. இவர் முதலில் ‘மெட்ராஸ் கஃபே’ என்ற ஹிந்தி படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் கலக்கி கொண்டிருந்த ராஷி கண்ணா , தமிழில் இமைக்க நொடிகள் என்ற படத்தின் மூலம் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தமிழில் அறிமுகமான முதல் படமே மிக பெரிய வெற்றியை தேடி தந்தது.

Advertisement

இதை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்காமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவரை நடிப்பில் இன்னும் பல தமிழ் படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் பிரபலமான என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளார். தீ மற்றும் அறிவு பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்யாத ஆட்களே இருக்க முடியாது. நிலையில் ராஷி கன்னா இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in