பல பிரபலங்கள் ஒன்றிணைந்து பாடிய “எண்ணம் போல் வாழ்க்கை” பாடல்!
மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இதனால் பாதிப்படைந்த ஏழை எளிய மக்கள் இன்று வரை திண்டாடி வருகின்றனர். இன்றும் பல இளைஞர்கள் வேலையின்றி வீட்டில் தவித்து கொண்டிருக்கின்றனர். கொரோனாவின் 2 வது அலை சமீபத்தில் பரவி மீண்டும் நம்மை வீட்டிற்குள் அடைத்தது. இன்றளவும் பல மக்கள் தடுப்பொசியை போடாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கொரோனா காலத்தில் மக்கள்

அவதிப்பட்டதை குறித்தும் , அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சினிமா பிரபலங்கள் பலர் பாடிய எண்ணம் போல் வாழ்க்கை என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் சசி குமார் , சாண்டி மாஸ்டர் , அஸ்வின் , புகழ் , யோகிபாபு , அதுல்ய ரவி , கீர்த்தி சுரேஷ் , ஆர்யா , ஐஸ்வர்யா ராஜேஷ் , மாஸ்டர் மஹேந்திரன் , அம்மு அபிராமி என பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தற்போது இந்த பாடலின் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in