The Indian Times

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா படத்தின் ட்ரைலர் வெளியாகியது

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.விண்ணை தாண்டி வருவாயா படத்தினை இயக்கி பல ரசிகர்களாலும் அறியப்பட்டவர் ஆகினார்.அன்று முதல் இன்று வரை கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.2001 ஆம் ஆண்டு நடிகர் மாதவனை வைத்து மின்னலே படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது நடிகர் சிம்புவை வைத்து இரண்டாவது முறையாக இவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு என்ற படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.இவருக்கு இயக்கத்தில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளி சென்றது.

Advertisement

தற்போது இவர் பிக் பாஸ் வருணை வைத்து இயக்கியுள்ள ஜோஷ்வா படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் கிருஷ்ணா,திவ்ய தர்ஷினி என பலரும் நடித்துள்ளார். ஐசரி கனேசன் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in