The Indian Times

மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234 படத்தின் பெயர் வெளியாகியது….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவர் ,உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் .

Advertisement

இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது.இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி கடந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

Advertisement

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.மேலும் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தில் ஜெயம் ரவி,துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க உள்ளனர்.இப்படத்திற்கு படகுழு தக் லைஃப் என பெயரிட்டுள்ளது.இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in