The Indian Times

லியோ வெற்றிகொண்டாட்டத்தில் பேசிய தளபதி விஜயின் முழு வீடியோ இதோ

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

இவருக்கு அண்மையில் வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத்இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன்,த்ரிஷா,மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது

Advertisement

இன்று சென்னையில் லியோ வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது,அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயின் முழு வீடியோவை சன்டிவி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in