The Indian Times

Keerthy’s Arabic Kuthu Dance Video – Halamithi Habibo

தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தை தாய்மொழியை கொண்ட கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார். “மகா நடி” என்னும் படத்தில் இவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் பயோகிராபியில் நடித்தார். அதன் பின்னர் இவரின் புகழ் உச்சத்தை அடைந்தது.

Advertisement

இந்நிலையில் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் கதாபாத்திரத்தையும் தாண்டி தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கினார். “அண்ணாத்த” திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி நடித்தார். மேலும் செல்வராகவனுக்கு தங்கையாக சாணி காயிதாம் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படி ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி தற்போது தங்கை கதாபாத்திரத்தில் தொடர்ந்து அடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது “காந்தாரி” படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பாடல் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. Youtube video code embed credits: Tamil Viral Videos 24×7

Advertisement

தற்போது வெளியாகி அனைவர் மனதையும் கொள்ளை அடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு இவர் நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் செய்யாத ஆட்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு அனைத்து நடிகர்களும் ஆடியுள்ளனர். தற்போது கீர்த்தியும் ஆடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in