The Indian Times

தோத்து பொய் தோப்புக்கரணம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் உள்ள அணைத்து சூப்பர்ஸ்டார்ஸ் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார்.இவர் இறுதியாக நடித்த திரைப்படம் மிஸ் இந்தியா திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் தெலுங்கில் நடித்த படம் ரங் தே. இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த குறும்புத்தனமான விஷயங்களை கீர்த்தி சுரேஷ் பதிவு செய்து வந்தார்.

Advertisement

அதுமட்டுமில்லாது அவ்வப்போது நடன வீடியோக்களையும் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது தோப்புக்கரணம் போடும் விடியோவை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வில் எதுக்காகவோ போட்டியிட்டு அதில் தோற்றுப்போய் கீர்த்தி சுரேஷ் தோப்புக்கரணம் போடுவது போல் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in