The Indian Times

சர்பத் படத்தின் அதிரும் வீராதி வீரன் பாடல் | கதிர் சூரி

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வளம் வருபவர் கதிர். கதாநாயகனாக மட்டுமில்லாமல் துணை நடிகராகவும் நடித்து அசத்தியவர் கதிர். இவரது முதல் திரைப்படம் மத யானை கூட்டம். இந்த அப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருப்பார். அதன் பிறகு கிருமி , என்னோடு விளையாடு, சத்ரு ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இதில் எந்த படமும் பெரியளவில் வெற்றியை இவருக்கு தேடி தரவில்லை.

Advertisement

இந்நிலையில் இவர் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்தார். இந்த படம் எதிர்பாராத அளவிற்கு வெற்றியை கதிருக்கு தேடி தந்தது. இதன் தொடர்ச்சியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நடித்தார் கதிர். இந்த படம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்து என்றே கூறலாம். அதையும் தாண்டி கதிரின் சிறந்த நடிப்பு அனைவரையும் வாயடைத்து போக செய்தது. இதன் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் கதிர்.

Advertisement

அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த ஜடா திரைப்படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை. தற்போது கதிர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்பத். இந்த படத்தை பிரபாகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி இவருடன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் அதிரும் வீராதி வீரன் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in