The Indian Times

பிறந்தநாள் அன்று நடந்த சோதனை.. புலம்பி தீர்க்கும் மணிமேகலை

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.

இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.

இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த சீசனிலும் மணிமேகலை கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில் இன்று என் பிறந்தநாள் வெளியே செல்லும் பொழுது கார் பஞ்சர் ஆகிவிட்டது.இதிலேயே தெரியுது இந்த வருடம் எப்படி இருக்கும் என புலம்பியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in