The Indian Times

அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.

இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது.

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.

இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

தற்போது திருமணத்திற்கு பிறகு இருவரும் யூடியூப் சேனல் வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.இவர்களின் வீடியோக்களை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் யூடியூபில் வெளியிடும் வீடியோ தான் அன்று ட்ரெண்டிங் என்று கூறினால் மிகையாகாது.

தற்போது ஸ்ரேயா தனது பெற்றோர்களின் 30வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in