The Indian Times

டக்கரான அப்டேட் கொடுத்த டான் திரைப்பட இயக்குனர்!!! சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். பல இன்னல்களை கடந்து , கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தொலைக்காட்சி தொகுப்பாளரும் சினிமா நடிகராகலாம், அதுவும் சாதாரண நடிகராக இல்லாமல் மாஸ் ஹீரோவாக உச்சத்தையே அடையலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஓரு சிறந்த உதாரணம். இவரை பாராட்டும் விதமாக தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது ஒரு சாமானியனை சாதனையாளராக மாற்றியுள்ளது.

Advertisement

தற்போது புதிதாக தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆக ஆசைப்படும் இளைஞர்களாகட்டும் , திரையுலகில் கால் பதிக்க முயற்சிக்கும் முதுமுக நடிகர்களாக இருக்கட்டும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertisement

இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போக காரணம் கார்த்தி நடித்த சுல்த்தான் தான் என்று சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் கார்த்தியின் தம்பி திரைப்படத்துடன் மோதியது அனைவரும் அறிந்ததே. மற்றொரு சிலர் தேர்தலின் காரணத்தால் படம் மே மாதம் தள்ளிப்போகிறது என்று கூறிவருகின்றனர். அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகாத காரணத்தினால் டாக்டர் படம் ரிலீசே குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. இது போக சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்று அனைவர்க்கும் தெரியும்.

சமீபத்தில் கூட ஏ.ஆர்.ரகுமான் இசையில் அயலான் திரைப்பட பாடல் ஒன்று வெளியிடப்பட்டு சமூகவலைத்தளத்தில் வைரலானது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவத்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் first look வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி சிவா ரசிகர்களுக்கு விருந்தளித்தது. இதன் படப்பிடிப்பு கோவையில் நடந்துகொண்டிருக்கிறது என்ற தகவல் வெளியானது, இதனிடையில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரியளவில் வைரலானது.

அதன் தொடர்ச்சிவ்யாக தற்போது டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவாதி முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததுள்ளது என்று தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இவ்வளவு குறுகிய காலத்தில் முதல்கட்டதை முடித்துவிட்டீர்களா என்று ஆச்சரியமாக கேட்டாலும் படத்தின் ரிலீஸ் காக ஆர்வமாக காத்திருக்கின்றனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in