The Indian Times

தரலோக்கல் ரவுடியாக இறங்கி குத்தும் நடிகர் ஆர்யாவின் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் முதல் பாடல் PROMO வெளியாகியது

முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் இயக்குனர் முத்தையா.இவரின் படங்களுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மண் மனம் மாறாத மண் வாசனையில் அடிதடியுடன் படங்களை எடுப்பதில் இவரை தமிழ் சினிமாவில் அடித்துக்கொள்ள ஆளே இல்லை.2013 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரை வைத்து குட்டிப்புலி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகியவர் தான் முத்தையா .இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்து முன்னணி இயக்குனராக அவதாரம் எடுத்தார் முத்தையா.அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் என்ற படத்தினை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.இப்படம் இவரை உயரத்திற்கு அழைத்து சென்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து வரிசையாக மண் வாசனையில் படத்தினை எடுத்து வருகிறார் முத்தையா.அதன்படி தற்போது மீண்டும் நடிகர் கார்த்தியை வைத்து இவர் விருமன் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,இதனால் அடுத்தப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார். தற்போது இவர் நடிகர் ஆர்யாவின் 34வது படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்திற்கு காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்தானி நடித்துள்ளார்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரும்ஸ்டிக் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது.

Advertisement

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ளது.தற்போது முதல் பாடலின் சிறிய வீடியோ தொகுப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடலின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர்.மேலும் முழு பாடலையும் காண ஆவலாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : JUNGLEE MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in