The Indian Times

மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக சந்தானம் பட கதாநாயகி… ஐயயோ என்னாச்சு என பதறும் ரசிகர்கள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஷாகா.இப்படத்தில் இவரது நடிப்பு பெரும் விமர்சையாக பேசப்பட்டது.மேலும் இவரை பார்த்தால் நடிகை போலவே இருக்காது அவ்வளவு எளிமையாக பக்கத்துக்கு வீட்டு பெண் போலவே இருப்பது தான் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணம்.தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிய இவர் முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு பிடிச்சுருக்கு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்குள் களம் இறங்கினார்.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம்,தெலுங்கு,ஹிந்தியிலும் படங்கள் நடித்துள்ளார்.தற்போது இவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.இவரது ரசிகர்கள் இப்படத்திற்கு ஆவலாக காத்திருக்கின்றனர்.எத்தனை படங்கள் வந்தாலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் கிடைத்த வரவேற்பு இவருக்கு எங்கும் கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.இந்நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதி ஆகியிருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரயும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காலநிலை மாற்றத்தினால் உடல்நிலை சரியில்லாமல் சென்றதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதி ஆகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அவர் உடல்நலம் சரியாகி மீண்டு வர அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in