The Indian Times

தங்கைக்காக யாசகம் கேட்கும் அண்ணனின் வாழ்க்கை… பிச்சைக்காரன் 2 படத்தின் “கோயில் சிலையே” வீடியோ பாடல் இதோ

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி நடித்து வருகிறார்.

Advertisement

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து படத்தில் உள்ள சில நிமிட காட்சிகளை ட்ரைலெராக வெளியிட்டு இருந்தது.தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள கோயில் சிலையே என்ற பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு,இப்பாடலில் தங்கைக்காக அண்ணன் யாசகம் கேட்க தொடங்கியதை அப்படியே காண்பித்து அனைவரையும் கண்கலங்க செய்துள்ளார் விஜய் ஆண்டனி.

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in