The Indian Times

நாக சைதன்யாவை பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை… செம்ம கடுப்பாகிய சமந்தா

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Advertisement

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் இவர் இயக்குனர் முகுந்தன் இயக்கத்தில் நடித்திருந்த யசோதா படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இவருக்கு அடுத்ததாக சகுந்தலா படம் வெளியாக உள்ளது.

Advertisement

இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் நாகசைதன்யா அண்மையில் பிரபல நடிகையுடன் டேட்டிங் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து நடிகை சமந்தாவிடம் கேட்ட பொழுது யாரு யாருகூட டேட்டிங் போனா எனக்கு என்ன அதை பற்றி எனக்கு கவலை இல்லை,காதலுக்கு மதிப்பளிக்காதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் அந்த கதை கண்ணீரில் தான் முடியும் என கூறியதாக ஊடகம் செய்தி வெளியிட்டு இருந்தது,தற்போது அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சமந்தா நான் அப்படி கூறவே இல்லை என ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in