The Indian Times

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயின் சிவராத்திரி நடனம் ! வைரல் வீடியோ உள்ளே.

விஜய் டிவி யில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும், ஆரம்ப காலத்தில் இருந்து அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். தமிழ் நாட்டையும் தாண்டி மலேசிய , சிங்கப்பூர் என உலகெங்கும் இருக்கும் பல தமிழ்மக்கள் சூப்பர் சிங்கர் சீனியர் , சூப்பர் சிங்கர் ஜூனியர் என இந்த நிகழ்ச்சிக்யை ரசித்து பார்க்காத ஆட்களே கிடையாது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலியுமாக அறிமுகமான நித்யஸ்ரீ இன்று சமூக வலைத்தளங்களில் அளவிலா ரசிகர்களை சேர்த்து கொண்டிருக்கிறார். முதலில் சூப்பர் சிங்கர் சீனியரில் நித்யஸ்ரீயின் அக்கா தான் பங்கேற்றார்.

Advertisement

ஆனால் அவரை தொடர்ந்து சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்குபெற்ற நித்யஸ்ரீ இறுதி சுற்று வரை சென்று தன் அக்கா எட்ட முடியாத உயரத்தை அடைந்தார். தன் குரலின் மூலம் மலேசியா , சிங்கப்பூர் என தமிழகத்தையும் தாண்டி அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்தார். விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் இன்று திரையுலகில் நட்சத்திரமாய் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் நித்யஸ்ரீ யும் தனக்குள் இருக்கும் பல திறமைகளால் ரசிகர்கள் நெஞ்சை கவர்ந்துள்ளார். சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ ஈட்டி படத்தில் அதர்வாவுக்கு தங்கையாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மாடலிங் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் அதிக பாலோவர்ஸை பெற்று வருகிறார்.

Advertisement

அது மட்டுமில்லாது அவ்வப்போது தன் பாடும் திறமையை தாண்டி நடன திறமையையும் வெளி காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது சிவ ராத்திரி ஸ்பெஷலாக நடன வீடியோ ஒன்று வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/imkailashrao/status/1370138715893374983

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in