The Indian Times

குக்கு வித் கோமாளி அஸ்வினை பார்க்க அலை கடலென திரண்டு வந்த பெண்கள் கூட்டம்! வைரல் வீடியோ உள்ளே.

விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. சிறியவர் முதல் பெரியவர் வரை ரசித்து பார்க்கும் விதமாக சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருப்பது இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. வார வாரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வலியுறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு சேட்டைகள் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும் . இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விளங்குவது புகழின் மற்றும் சிவாங்கியின் சேட்டை , பாலாவின் மொக்க கவுண்ட்டர் என சொல்லி கொண்டே போகலாம். இவர்கள் வரிசையில் குக்கு வித் கோமாளியில் பங்கு பெற்று கலக்கி கொண்டிருக்கும் அஸ்வினிற்கும் பெரும் பங்கு உண்டு. வார வாரம் வித விதமாக டிஷ்களை செய்து செஃப்களை கவருவதோடு மட்டுமல்லாமல் , ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் கவர்ந்திழுத்துள்ளார் என்று தான் கூறவேண்டும். அதிலும் பெண்களின் கனவு காதலனாகவே இருக்கிறார் என்றும் கூறலாம்.

Advertisement

Advertisement

அந்தளவிற்கு பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளமானோர் உண்டு. இந்நிலையில் நேற்று குக்கு வித் கோமாளி அஸ்வின் ஹோட்டல் திறப்பு விழுவிற்கு சென்றுள்ளார். இவருடன் குக்கு வித் கோமாளி பலவும் கலந்து கொண்டுள்ளார். அஸ்வின் வந்ததும் அவரை பார்ப்பதற்கு பெண்கள் கூட்டமே திரண்டு வந்திருந்தது. அஸ்வின் அஸ்வின் என்று கூச்சலிட்டு அஸ்வினுக்காக பாடல் பாடி காண்பித்தனர். அதோடுமட்டுமல்லாமல், அவருடைய ரசிகைகள் அவரோடு போட்டோ எடுத்துக்கொண்டனர். மிக குறுகிய காலத்தில் என்னை இந்த அளவிற்கு பிரபலம் செய்தது குக்கு வித் கோமாளி தான் என்று கூறியுள்ளார் அஸ்வின்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in