The Indian Times

சிம்பு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட குக்கு வித் கோமாளி புகழ்! வைரல் வீடியோ உள்ளே.

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான்.

Advertisement

இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக தல அஜித்தின் படம் வலிமை , சிவகார்த்திகேயனின் படம் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அதே சமயத்தில் புதிய கார் ஒன்று எடுத்துள்ளதாக புகழ் அந்த காரை ஓட்டி காட்டி சந்தோஷத்துடன் சமீபத்தில் வீடியோ பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பல விடீயோக்களை அவர் யுடியூப் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றி வந்தார். அந்த வரிசையில் சிவாங்கியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. அதன் பிறகு தற்போது சிம்புவின் சிலமபட்டம் பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் எனக்கு பலம் என் ரசிகர்கள் தான் என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in