பள்ளி சீருடையில் வைரலாகும் குக்கு வித் கோமாளி சிவாங்கி புகைப்படம்!

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலம். குக்கு வித் கோமாளி என்றாலே நம் நினைவில் முதலில் வருபவர்கள் புகழ் மற்றும் சிவாங்கி தான். அண்ணன் தங்கை என கூறி கொண்டு இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறைகள் அங்கிருக்கும் குக்குகளை தலையை பிச்சிக்க வைக்கும் என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பள்ளி சீருடையில் வைரலாகும் குக்கு வித் கோமாளி சிவாங்கி புகைப்படம்! 1

விளம்பரம்

முக்கியமாக சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அவரை கியூட்டி பை என்று தான் அழைகிறார்கள். சிவாங்கி முதலில் விஜய் டிவியில் அறிமுகமானது சூப்பர் சிங்கர் மூலியமாக தான். ஆனால் சூப்பர் சிங்கரை விட அதிக ரசிகர்களை அவருக்கு பெற்று தந்த நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி தான். சின்னத்திரையில் பிரபலமடைந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி.

பள்ளி சீருடையில் வைரலாகும் குக்கு வித் கோமாளி சிவாங்கி புகைப்படம்! 2

விளம்பரம்

இவர் ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவர் என்றே கூறலாம் ஏனென்றால் இவரது அப்பா கிருஷ்ணகுமார் இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் மற்றும் இவரது அம்மா ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் கர்நாடக சங்கீதத்தில் பிரபலமானவர். இப்படிப்பட்ட இசை பின்னணியில் பிறந்த இவர் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி இன்று குக்கு வித் கோமாளி மூலமாக அதிகளவில் ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரை சிலர் சின்னத்திரை சமந்தா சின்ன திரை ஜெனிலியா என்று பல பெயர்களை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பள்ளி சீருடையில் வைரலாகும் குக்கு வித் கோமாளி சிவாங்கி புகைப்படம்! 3

விளம்பரம்

அதற்கு ஏற்றது போல் கடந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்த சமந்தா போல் பள்ளி மாணவி போல் உடையணிந்து வந்திருந்தார். ஆனால் தற்போது உண்மையிலேயே சிவாங்கியின் பள்ளி பருவத்தில், பள்ளி மாணவியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் தனது பள்ளி தோழிகளுடன் ஸ்கூல் யூனிஃபாமில் சிவாங்கி எடுத்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் வர்ணித்தபடி கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment