The Indian Times

66 வயதிலும் கெத்தாக சிலம்பம் சுற்றி காட்டிய கமல்ஹாசன்! வைரல் வீடியோ உள்ளே.

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கென்றே பெயர்போன நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசன். பல திறமைகளை ஒளித்து வைத்துள்ள கமல் தற்போது அரசியலில் குதித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. பல வெற்றி படங்களில் தன் நடிப்பின் மூலம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி சமூகவலைத்தலங்களில் வைரலானது.

Advertisement

இதை தொடர்ந்து இந்தப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா கமலுடன் முதல் முறையாக ஜோடி சேர உள்ளார் என்ற தகவல் வெளி வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பதற்கு காரணம் கமல் அரசியல் பிரச்சரங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது தான். தேர்தல் முடிந்த பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கமல் தனியாகவே மக்களை சந்தித்து வருகிறார். கோவையில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் ராமநாதபுரத்தில் உள்ள சாண்டோ சின்னப்பதேவரின் தேகப்பயிற்சி நிலையத்திற்கு சென்று சிலம்பம் சுற்றிய சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

அதோடு மட்டுமல்லாமல் தானும் சிலம்பம் எடுத்து சுற்றி தனக்கு 66 வயதானாலும் இன்னமும் இளமையாக தான் இருக்கின்றேன் என்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in