The Indian Times

ஆன்ட்டி என கலாய்த்த நடிகரின் படத்திலேயே நடிக்கும் – தங்கமாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இப்போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் நடிகர் நடிகை மட்டுமில்லாமல் நிக‌ழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் வி ஜே பார்வதியும் ஒருவர். இவர் ஒரு ஜர்னலிஸ்ட் அதுமட்டுமல்லாமல் இவர் மாடலிங் துறையில் இருந்தவர். மேலும் இவர் கலாட்டா யூடியூப் சேனலில் வி ஜே வாக இருந்து வந்தார்.

இப்படி பல துறைகளில் அவர் இருந்து இப்போது படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். ஆம் இவர் கடந்த ஆணடு ஹிப் ஹாப் ஆதியை ஒரு நேர்காணல் செய்து இருந்தார். அப்போது அவர் ஹிப் ஹாப் ஆதியிடம் பல கேள்விகள் அவர் வாழ்க்கை அனுபவம் குறி்த்து கேட்டு வந்தார்.

Advertisement

அந்த சமயத்தில் திடீரென நீங்கள் ஆண்டி பார்த்து சைட் அடித்தது உண்டா என்று கேட்டு இருப்பார் அப்போது ஹிப் ஹாப் ஆதி உங்களை பார்த்து தான் முதல் முறை என்று அவரை நக்கலாக கலாய்த்து இருப்பார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி பல மீம்ஸ்களுக்கு வழிவகுத்தது. இதனால் அவரை ஆண்ட்டி என்று பல இளைஞர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். இவ்வாறாக இவர் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி விட்டார்.

இப்போது இவருக்கு ஹிப் ஹாப் படத்திலே நடிக்கும் வாய்பை பெற்று இருக்கிறாராம். இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் சிவகுமார் சபதம் என்ற பெயரில் இயங்கும் இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோ வாக நடிக்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in