The Indian Times

துல்கர் சல்மான் நடிக்கும் “சல்யூட்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியது!! – விவரம் உள்ளே!

மலையாள சூப்பர் ஸ்டார் என்றாலே மம்மூட்டி தான் நினைவுக்கு வருவார். இவரது தேர்ந்த நடிப்பும், கனிவான பேச்சும் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த காலம் உண்டு. அந்த வகையில் இவரது மகனான துல்கர் சல்மானும் இவரை போலவே தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருகிறார்.

Advertisement

கடந்த வருடம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கவுதம் வாசுதேவ மேனன், துல்கர், ரக்க்ஷன், ரித்து வர்மா, நிரஞ்சினி, மற்றும் பலர் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன் இந்த திரைப்படத்தின் இயக்குனருக்கும் படத்தில் நடித்திருந்த துணை நடிகை நிரஞ்சனிக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் உருக்கமாக பதிவு ஒன்றை நடிகர் துல்கர் பதிவு செய்தார். அந்த பதிவு அனைவராலும் வரவேற்கப்பட்டது.இதையடுத்து இவர் நடித்து கொண்டிருக்கும் “சல்யூட்” படத்தின் போஸ்டர் வெளியாகியது.அந்த போஸ்ட் இதோ!!

Advertisement

இதனை அவர் தன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சில மணி நேரங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில் இவர் ராயல் என்பீல்ட் பைக் அருகில் காக்கி உடையில் நின்ற வண்ணம் உள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆன்றூஸ் இயக்குகிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும், முன்னணி கதாபாத்திரங்களில் டையான பெண்ட்டி, மனோஜ் கே ஜெயன், அலென்ஸிர் லே, பின்னு பப்பு ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் போலீசாக நடிக்கிறார். சாக்லேட் பாயாக நடித்து வந்த இவர் புதிய பரிணாமத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவதாகவும் விரைவில் திரையரங்கில் வரும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டிராபிக், உயரே, போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி – சஞ்சய் இந்த படத்திற்கும் கதை எழுதுவது மேலும் சிறப்பாகும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in